Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்தி சிங்!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்தி சிங்!

By: Monisha Sat, 06 June 2020 2:01:46 PM

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்தி சிங்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில், சூர்யா நடித்த ’என்ஜிகே’, கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். கொரோனா விடுமுறையில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சி ப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பீட்டா இந்தியா என்ற அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். முழு நிர்வாணம் போல் இருக்கும் அந்த புகைப்படத்தில், காய்கறிகள் வைத்து அவரது உடல் மறைக்கப்பட்டது போல புகைப்படம் உள்ளது.

actress rakul preethi singh,world environment day,peta india,photo ,நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்,உலக சுற்றுச்சூழல் தினம்,பீட்டா இந்தியா,புகைப்படம்

இதில் ’விலங்குகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க சைவத்துக்கு மாறி இந்த உலகை காப்போம்’ என்று ரகுல் ப்ரீத்தி சிங் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளுக்கு காப்போம் என்பதை கூற வித்தியாசமான முறையில் ரகுல் ப்ரீத்தி சிங் போஸ் கொடுத்துள்ளார். விலங்குகளின் அமைப்பான பீட்டா இந்தியாவுக்கு ஆதரவான இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னொருபுறம் வழக்கம் போல் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Tags :