Advertisement

சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக வந்த தகவல் வதந்தியாம்

By: Nagaraj Fri, 23 Sept 2022 6:44:04 PM

சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக வந்த தகவல் வதந்தியாம்

ஐதராபாத்: சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறாரா?... சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவுக்கு சரும பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தத் தகவலை சமந்தாவின் மேலாளர் மறுத்துள்ளார். ஆனால் சமந்தா எதற்காக அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் சமந்தா நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பு தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

samantha,treatment,america,denial,skin problem,photo opportunities ,சமந்தா, சிகிச்சை, அமெரிக்கா, மறுப்பு, சரும பிரச்னை, பட வாய்ப்புகள்

சமந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் முகத்தில் ஏற்பட்ட சரும பிரச்னை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் காரணமாக அவர் ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் பட வாய்ப்புகளை அவர் இழக்க நேரிட்டது.

தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் மூலம் இந்திய அளவில் சமந்தா பிரபலமாகியிருக்கிறார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாக சைதன்யாவுடனான விவகாரத்து தொடர்பாக பேசியது மிகவும் வைரலானது.

Tags :
|