- வீடு›
- பொழுதுபோக்கு›
- விடா முயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடி தமன்னா என்று உலா வரும் தகவல்
விடா முயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடி தமன்னா என்று உலா வரும் தகவல்
By: Nagaraj Sat, 29 July 2023 11:23:49 PM
சென்னை: த்ரிஷா இல்லையாம் தமன்னாவாம்... அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதன் பின் வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் ஒரு தகவல் உலா வருகிறது, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடி தமன்னா என்று சொல்கிறார்கள்.
அஜித் வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று திரும்பிவிட்ட நிலையில் அடுத்த மாத இடையில் ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் புது தகவல் என்னவென்றால் தமன்னா தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பது தான். இது நடந்தால் வீரம் படத்திற்கு பிறகு அஜித்துடன் தமன்னா மீண்டும் ஜோடி சேர்வார்.
தற்போது தமன்னா தான் ட்ரெண்டிங்கான நடிகையாக மாறி இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ், ஜெயிலர், காவாலா பாடல் என தமன்னா மீண்டும் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு அஜித் பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.