Advertisement

சாய்பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் டிரைலர் வெளியீடு

By: Nagaraj Thu, 07 July 2022 7:48:58 PM

சாய்பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் டிரைலர் வெளியீடு

சென்னை: நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

tamil,telugu,kannada,sai pallavi,trailer,crew ,தமிழ், தெலுங்கு, கன்னடம், சாய்பல்லவி, டிரைலர், படக்குழுவினர்

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகிறது. இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags :
|
|