Advertisement

லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி செம வைரலாகிறது

By: Nagaraj Sun, 12 Nov 2023 4:03:12 PM

லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி செம வைரலாகிறது

சென்னை: தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது... சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீசர், தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியான லால் சலாம் டீசர், ரஜினி ரசிகர்களுக்கு செம்ம கூஸ்பம்ஸாக அமைந்துள்ளது. வெளியானது லால் சலாம் டீசர்: பல வருடங்களுக்குப் பின்னர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம்.

salaam teaser,rajini,mass action,diwali special,politics ,சலாம் டீசர், ரஜினி, மாஸ் ஆக்சன், தீபாவளி ஸ்பெஷல், அரசியல்

தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக லால் சலாம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 1.39 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசர், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் வைப் கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லால் சலாம், விளையாட்டில் மத அரசியல் இருப்பது குறித்து பேசியுள்ளதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது.

இரண்டு ஊர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போல பில்டப் செய்யப்படுகிறது. இதனால், இந்து - முஸ்லிம் இடையே கலவரம் வெடிக்க, அதற்கு பஞ்சாயத்து செய்ய களமிறங்குகிறார் கேங்ஸ்டர் மொய்தீன் பாய். இப்படித்தான் லால் சலாம் டீசரில் சூப்பர் ஸ்டாரின் கேரக்டர் அறிமுகமாகிறது.

இதனால் இந்தப் படம் விளையாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்வதற்கு எதிரான கருத்தியலோடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம் டீசரில் ரஜினியின் செம்ம மாஸ் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.

Tags :
|