- வீடு›
- பொழுதுபோக்கு›
- வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சமந்தா
வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சமந்தா
By: vaithegi Sat, 31 Dec 2022 10:04:31 AM
புத்தாண்டு வாழ்த்தை வலைத்தளத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோயால் பாதித்து சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்.
தான் நடித்து திரைக்கு வந்த 'யசோதா' படத்துக்கு கூட படுக்கையில் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதையடுத்து நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு வருகிறார்.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவும் திட்டம் உள்ளது. ஏற்கனவே ஒப்பந்தமான இந்தி படங்களில் இருந்து சமந்தா விலகி விட்டதாக கூறப்படுகிறது. படுக்கையில் இருந்தபடியே வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் வெளியிட்டு கொண்டு வருகிறார்.
இதையடுத்து இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், "முன்னோக்கியே செயலாற்றுங்கள். நாம் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதை கட்டுப்படுத்துவோம். புதிய மற்றும் எளிய முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இனிய 2023 புத்தாண்டு'' என அவர் கூறியுள்ளார்.