Advertisement

அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளகிறார் சமந்தா

By: vaithegi Sun, 20 Aug 2023 2:41:10 PM

அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளகிறார் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இதையடுத்து அவர் ‘குஷி’ படத்தில் நடித்தபோது, மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்கள் சிகிச்சைக்குப் பின் இப்போது ஓரளவு குணமடைந்த சமந்தா அவர் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பை முடித்தார்.

இதையடுத்து முழுவதும் குணமடையாததால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகவும் இதற்காக 1 வருடம் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் பல வெளியாயின.

samantha,usa ,சமந்தா,அமெரிக்கா

இந்த நிலையில், தோழியுடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற அவர், ‘குஷி’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார். அதை முடித்துக்கொண்டு நேற்று முன் தினம் ஹைதாராபாத்திலிருந்து நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் அவர் தாயாரும் சென்றுள்ளார்.

நியூயார்க்கில் இன்று நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் கலந்துகொள்கிறார். அதன் பின்னர், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா முழுவதும் குணமடைந்த பின் இந்தியா திரும்புவார் என தகவல் கூறப்படுகிறது.

Tags :