Advertisement

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன் ..சமந்தா

By: vaithegi Thu, 21 Sept 2023 12:53:51 PM

ஆக்‌ஷன்  காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன் ..சமந்தா

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து கடந்த மாதம் வெளியான ‘குஷி’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தசை அழற்சி நோயிலிருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து கொண்டு வருகிறார். இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என கூறப்படுகிறது. இதனால் அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், அவர் சருமம் தெளிவாக இருப்பது பற்றி கேட்டார். இதையடுத்து அதற்குப் பதிலளித்த அவர், ‘‘உண்மையில் தசை அழற்சிக்காக ஸ்டீராய்டுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

samantha,action scene ,சமந்தா,ஆக்‌ஷன்  காட்சி

அது என் சருமத்தை மாற்றிவிட்டது. தோள் பளபளப்பாக இல்லை, நீங்கள் என்னை ஃபில்டரில் தான் பார்க்கிறீர்கள்’’ என அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், சிட்டாடெல் வெப் தொடரில் கடுமையான ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

“ஆக்‌ஷன் காட்சியில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன். அது ஏன் என்று தெரியவில்லை. சிட்டாடெல் தொடரில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளேன். அது கடினமாக இருந்தது. இருந்தாலும் அந்தச் சவாலை நேசித்தேன். அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :