Advertisement

சாகுந்தலம் படம் ... கதாபாத்திரத்தின் அனுபவங்களை பகிர்ந்த சமந்தா

By: vaithegi Tue, 10 Jan 2023 10:10:50 AM

சாகுந்தலம் படம்   ...  கதாபாத்திரத்தின் அனுபவங்களை பகிர்ந்த சமந்தா

சகுந்தலை கதாபாத்திரத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ..... சமந்தா 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்த 'சாகுந்தலம்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து துஷ்யந்தன், சகுந்தலை கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இதில் சமந்தா சகுந்தலை வேடத்தில் நடித்து இருக்கிறார். சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்தபோது எதிர்கொண்ட கஷ்டங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.

samantha,sakundalam ,சமந்தா ,சாகுந்தலம்

இதனை அடுத்து அவர் கூறும்போது, ''சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் சுபாவத்திற்கு ஏற்றபடி முகத்தில், ஒரே மாதிரியான முகபாவனை காட்ட வேண்டி வந்தது.

நடந்தாலும், பேசிக்கொண்டிருந்தாலும், ஓடினாலும், கடைசியில் அழுதாலும் கூட முகத்தில் அந்த பாவனை ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதனால் மிகவும் நான் கஷ்டப்பட்டேன். அப்படி நடிப்பதற்கு ஒரு கட்டத்தில் என்னால் முடியவில்லை. இதற்காக பிரத்யேக பயிற்சி கூட எடுத்துக்கொண்டேன்'' என அவர் கூறினார்.

Tags :