Advertisement

ஆரிக்கு ஹவுஸ்மேட்ஸ் கொடுக்கும் ஆதரவால் டென்ஷன் ஆன சம்யுக்தா

By: Nagaraj Fri, 06 Nov 2020 7:46:58 PM

ஆரிக்கு ஹவுஸ்மேட்ஸ் கொடுக்கும் ஆதரவால் டென்ஷன் ஆன சம்யுக்தா

ஆரிக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பதால் சம்யுக்தா டென்ஷன் ஆகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் இது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 32 நாட்களாக முடிந்து விட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் விவாத மேடை முடிந்து ஹாலி டாஸ்க்காக பிக் பாஸ் எஃப்எம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆர்ஜேவாக சுசி, அர்ச்சனா செயல்பட, சுசித்ராவை விட அர்ச்சனா மாஸாக பர்ஃபாமன்ஸ் செய்து அசத்தினார்.

promo video,samyukta,balaji,ari,nominated ,ப்ரோமோ வீடியோ, சம்யுக்தா, பாலாஜி, ஆரி, நாமினேட்

இதில் சுசி கொஞ்சம் அப்செட் ஆனார். இதையடுத்து பாட்டு, குக்கிங் டாஸ்க் என நேற்றைய தினம் சற்று நிம்மதியாகவே சென்றது. இந்நிலையில் 33வது நாளான இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ், இந்த வாரம் முழுவதும் இந்த வீட்டில் சிறப்பா செயல்பட்ட மூன்று நபர்களை தேர்வு செஞ்சி சொல்லுங்க என்று கூறுகிறார்.

அப்போது, நிஷா, சோம் மற்றும் ஆரியை நாமினேட் செய்கிறார். அர்ச்சனா சோம்மை நாமினேட் செய்ய, ஆரி, பாலா, ஷிவானி உள்ளிட்ட பலரும் சோம் சேகரை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் அனிதா, ஆஜித், ஷனம், ரமேஷ் உள்ளிட்டோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர்.

இறுதியாக சம்யுக்தா பாலாஜியிடம், எனக்கு புரியல, ஏன் அவங்க ஒப்பீனியன் இப்படி இருக்கு என்று கேட்க, அதற்கு பாலாஜி வழக்கம் போல, நான் இந்த வீட்டுல கார்னர் செய்யப்படுறேன் என்று கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Tags :
|
|