Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லியோ படத்தில் அட்டகாசமான தோற்றத்தில் சஞ்சய் தத்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறுகிறது

லியோ படத்தில் அட்டகாசமான தோற்றத்தில் சஞ்சய் தத்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறுகிறது

By: Nagaraj Sun, 30 July 2023 10:48:06 PM

லியோ படத்தில் அட்டகாசமான தோற்றத்தில் சஞ்சய் தத்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறுகிறது

சென்னை: அசத்தல் தோற்றம்... அட்டகாசமான தோற்றத்தில் களமிறங்குகிறார் நடிகர் சஞ்சய் தத். நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத் அசத்தல் க்ளிம்ஸ் வெளியாகி உள்ளது.

கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லியோ படத்திலும் அதே போன்றதொரு அசுரத் தனமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

intro video,sanjay dutt,expectation,character,leo movie ,அறிமுக வீடியோ, சஞ்சய் தத், எதிர்பார்ப்பு, கதாபாத்திரம், லியோ படம்

இந்நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்யின் லியோ பட அறிவிப்பு முதல் ஒவ்வொரு அப்டேட்டும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சஞ்சய் தத்தின் கதாபாத்திர அறிமுகம், ரசிகர்களின் யூகங்களுக்கு தீனி போட்டுள்ளது.

வீடியோவை பொறுத்தவரை தொடக்கத்தில் கழுகின் சப்தத்துடன் தொடங்குகிறது. அடுத்து ஒரு மாஸாக கூட்டத்துக்கு நடுவே சஞ்சய் தத் நடந்து செல்கிறார். ‘ஆண்டனி’ என பெயர் ஒலிக்கிறது. கேங்க்ஸ்டர் கும்பலின் தலைவனாக சஞ்சய் தத் இருப்பதைப் போன்ற காட்சிகள் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags :