Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்த முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நடிகை கங்கனாவுக்கு சஞ்சய் ரவுத் பதிலடி

மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்த முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நடிகை கங்கனாவுக்கு சஞ்சய் ரவுத் பதிலடி

By: Monisha Fri, 04 Sept 2020 5:19:35 PM

மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்த முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நடிகை கங்கனாவுக்கு சஞ்சய் ரவுத் பதிலடி

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பல தரப்புகளை அடுத்தடுத்து குற்றம்சுமத்தி வருகிறார். இந்நிலையில் ஒருவர் கங்கனா உள்ளிட்ட சிலரைப் பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்திருந்தார். இந்த கருத்தை மும்பை காவல்துறை டுவிட்டர் பக்கம் லைக் செய்திருந்தது. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பகிர்ந்திருக்கும் கங்கனா "பொதுவில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்தின் கொலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்துள்ளது. இதை விட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது.

என்னை இப்படி வெளிப்படையாக மும்பை காவல்துறை அச்சுறுத்தும் போது, எனக்கெதிரான அவதூறை ஊக்குவிக்கும் போது நான் மும்பையில் பாதுகாப்புடன் இருக்க முடியுமா. என் பாதுகாப்புக்கு யார் காரணம்" என்ற பிரதமரின் டுவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிவசேனாவின் பத்திரிகையான சம்னாவில் சஞ்சய் ரவுத் எம்.பி மும்பையில் வசித்த போதிலும் மும்பை போலீசார் மீது விரல்களை உயர்த்தி உள்ளார் அவரது "துரோகம்" வெட்கக்கேடானது என்று கூறினார். மேலும் "மும்பைக்கு வர வேண்டாம் என்று நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். இது மும்பை போலீஸை அவமதிப்பதைத் தவிர வேறில்லை. இது குறித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறி இருந்தார்.

maharashtra,mumbai,actress kangana ranaut,sanjay rawat,retaliation ,மஹாராஷ்டிரா,மும்பை,நடிகை  கங்கனா ரனாவத்,சஞ்சய் ரவுத்,பதிலடி

அது குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள டுவிட்டில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தன்னை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மும்பை காவல்துறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என்று ரவுத் பகிரங்கமாக மிரட்டுவதாக கங்கனா தனது டுவிட்டில் பதிவிட்டு உள்ளார். மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் போலவே கருதுகிறேன் என கங்கனா மேலும் கூறினார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சஞ்சய் ரவுத் பதிலடி கொடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை, நடவடிக்கை எடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி எதுவும் தெரியாது. மும்பை மற்றும் மராட்டியாவைப் பற்றி இழிவான எதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

பயங்கரவாத தாக்குதல்களின் போது மும்பை காவல்துறை தனது உயிரை பணயம் வைத்து குடிமக்களை காப்பாற்றியுள்ளது. 1992 குண்டுவெடிப்புகளில் கூட அவர்கள் நகரத்தையும் அதில் வாழும் மக்களையும் பாதுகாத்தனர். கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயின் போது பல மும்பை காவல்துறை அதிகாரிகள் தங்கள் உயிர்களை இழந்து தியாகங்களைச் செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

Tags :
|