Advertisement

டிக்கிலோனா படத்திற்காக 48 முறை கெட்டப் சேஞ்ச் செய்த சந்தானம்

By: Nagaraj Sun, 31 May 2020 8:31:12 PM

டிக்கிலோனா படத்திற்காக 48 முறை கெட்டப் சேஞ்ச் செய்த சந்தானம்

48 முறை கெட்டப் சேஞ்ச் செய்த சந்தானம்... டிக்கிலோனா திரைப்படத்திற்கு சந்தானம் 48 முறை கெட்டப் மாற்றியுள்ளாராம்.

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மூன்று வேடங்கள் என்பதால் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கு மாற குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகுமாம். மேலும் சந்தானம் 48 முறையாவது ஒரு நாளில் கெட்டப் மாற்றியுள்ளாராம்.

santhanam,gettap,one day,third,luke poster ,
சந்தானம், கெட்டப், ஒரே நாள், மூன்றாவது, லுக் போஸ்டர்

இது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் சந்தானம் சளைக்காமல் கெட்டப் சேஞ்ச் செய்துள்ளாராம். தற்போது இந்த படத்திற்கு சந்தானம் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்பொழுது இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Tags :
|
|