Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அஜித் படத்திற்கு முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசை; விரைவில் அறிவிப்பு?

அஜித் படத்திற்கு முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசை; விரைவில் அறிவிப்பு?

By: Nagaraj Fri, 10 Feb 2023 05:00:05 AM

அஜித் படத்திற்கு முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசை; விரைவில் அறிவிப்பு?

சென்னை: முதல் முறை... சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.

fans,enthusiasm,music score,ajith film,santosh narayanan ,ரசிகர்கள், உற்சாகம், இசையமைக்கிறார், அஜித் படம், சந்தோஷ் நாராயணன்

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தன்னுடைய பயோவில் "ஏகே 62 இயக்குனர்" என்ற ஹேஸ்டேக் மற்றும் அஜித்தின் கவர் போட்டோவை நீக்கியிருந்தார்.

இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அனிருத்திற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதி செய்யப்படுமானால் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|