- வீடு›
- பொழுதுபோக்கு›
- பொன்னியின் செல்வன் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சரத்குமார்!
பொன்னியின் செல்வன் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சரத்குமார்!
By: Monisha Wed, 18 Nov 2020 12:40:58 PM
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு தாய்லாந்தில் நடந்தது. மீண்டும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், பிரபு, பார்த்திபன், நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், லால், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட பலர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராவதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர், நடிகைகள் தங்கள் தோற்றத்தை மாற்றி வருகிறார்கள். திரிஷா சமீபத்தில் குதிரை சவாரி பயிற்சி எடுத்தார். நடிகர்கள் நீளமாக தாடி வளர்த்துள்ளனர்.
படத்தில் சரத்குமார் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். முறுக்கேறிய தேகத்தோடு இருக்கும் அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.