Advertisement

இதுவரை ஏற்றிராத வித்தியாசமான ரோல்... நந்தனில் கலக்குவாரா சசிகுமார்

By: Nagaraj Thu, 01 Dec 2022 11:42:00 AM

இதுவரை ஏற்றிராத வித்தியாசமான ரோல்... நந்தனில் கலக்குவாரா சசிகுமார்

சென்னை: நந்தன் படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடித்திருக்கிறாராம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சசிகுமார் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களில் ‛நான் மிருகமாய் மாற, காரி' என இரண்டு படங்கள் வெளியாகின. அடுத்து ‛நந்தன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கி உள்ளார்.

different,role,sasikumar,shooting works,complete completion ,வித்தியாசமானது, ரோல், சசிகுமார், படப்பிடிப்பு பணிகள், முழுமை நிறைவு

சசிகுமார் ஜோடியாக 'பிக் பாஸ்' புகழ், நடிகை சுருதி பெரியசாமி நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது.


படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை உதயநிதி வெளியிட்டார். இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடித்திருக்கிறாராம்.

Tags :
|