- வீடு›
- பொழுதுபோக்கு›
- இரட்டை வேடத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று ஸ்கேன்: நடிகர் விஜய்யின் அடுத்த பட அப்டேட்
இரட்டை வேடத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று ஸ்கேன்: நடிகர் விஜய்யின் அடுத்த பட அப்டேட்
By: Nagaraj Sat, 02 Sept 2023 06:18:40 AM
சென்னை: விஜய் தற்போது லியோ படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் வெங்கட்பிரபு படத்தில் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக படக்குழு அமெரிக்கா பறந்து, அங்கு ஹாலிவுட் டெக்னாலஜி மூலம் விஜய்யின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர்.
விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம்.
இதற்கான வேலைகள் தற்போது அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
அதற்காக படக்குழு அமெரிக்கா பறந்து, அங்கு ஹாலிவுட் டெக்னாலஜி மூலம் விஜய்யின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அதன் புகைப்படங்களை வெங்கட் பிரபு இணையத்தில் வெளியிட்டுள்ளார்,
Tags :
internet |
usa |