Advertisement

இளம் இயக்குனர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் செல்வராகவன்

By: Nagaraj Tue, 01 Aug 2023 7:24:26 PM

இளம் இயக்குனர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் செல்வராகவன்

சென்னை: புது சிந்தனைகளுடன் வரும் இளம் இயக்குனர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். தற்போது மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செல்வராகவன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

"தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு நான் சொன்ன வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

director,selvaraghavan,supporting hand,art direction,cinematography , இயக்குனர், செல்வராகவன், ஆதரவு கரம், கலை இயக்கம், ஒளிப்பதிவு

அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. படப்பிடிப்பு திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்," என்கிறார் டைரக்டர் ரங்கநாதன்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, ராமபாண்டியன் படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

புது சிந்தனைகளுடன் வரும் இளம் இயக்குனர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் செல்வராகவன். பல இயக்குனர்கள் விரும்பும் நடிகராக மாறி வருகிறார் செல்வ ராகவன்.

Tags :