Advertisement

காமெடியாக புகார் செய்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை அமிர்தா

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:33:09 PM

காமெடியாக புகார் செய்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை அமிர்தா

சென்னை: என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார் என காமெடியாக பாக்யா மீது அமிர்தா புகார் கூறி இருக்கிறார்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது எழில் - அமிர்தா திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. மறுபுறம் வீட்டை காலி செய்ய சொல்லும் கோபியை எப்படி சமாளிக்க போகிறோம் என இருக்கிறார் பாக்யா.

marriage,work,comedy,complaint,serial,bhagya ,திருமணம், வேலை, காமெடி, புகார், சீரியல், பாக்யா

அந்த நேரத்தில் தாத்தா அவரது மொத்த சொத்தையும் எழுதி கொடுத்து விடுவதாக கூறி, அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்துவிடும்படி கேட்கிறார். கோபியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

அடுத்து வரும் நாட்களில் பாக்யா மற்றும் அமிர்தா இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்வது போல காட்சிகள் வருகிறது. அதன் ஷூட்டிங்கில் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரித்திகா.

'என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார்' என காமெடியாக பாக்யா மீது புகார் கூறி இருக்கிறார்.

Tags :
|
|
|