- வீடு›
- பொழுதுபோக்கு›
- சீரியல் நடிகை நிஷா – கணேஷ் ஜோடிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது
சீரியல் நடிகை நிஷா – கணேஷ் ஜோடிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது
By: Nagaraj Wed, 04 Oct 2023 11:51:05 AM
சென்னை: சீரியல் நடிகை நிஷா - கணேஷ் ஜோடிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கடராம் இருவரும் 2015ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நிஷா அதற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
நிஷா - கணேஷ் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை 2019ல் பிறந்தது. அவருக்கு சமைரா என பெயர்சூட்டினர். இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.
Tags :
ganesh |
baby |
birth |