Advertisement

வெப் சீரிஸ் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ள ஷாருக்கான் மகன்

By: Nagaraj Mon, 01 May 2023 8:27:22 PM

வெப் சீரிஸ் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ள ஷாருக்கான் மகன்

மும்பை: இயக்குனராகும் ஆர்யன் கான்... பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நெட்பிளிக்ஸ் தயாரித்த ‘ஸ்டார்டம்’ என்ற வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் மார்ச் 2021 இல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மும்பையிலிருந்து கோவாவிற்கு சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஆர்யன் கானின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

Tags :
|