Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா

By: vaithegi Wed, 13 Sept 2023 10:06:28 AM

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா

‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்து உள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து 2-வது நாளில் இந்த படம் ரூ.240 கோடி வசூலித்தது. முதல் 3 நாட்களை பொறுத்தவரை உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்த இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூலை தாண்டியிருந்தது.

movie,jawan,shah rukh khan ,திரைப்படம் ,ஜவான்,ஷாருக்கான்

தமிழ்நாட்டில் ரூ.20 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.24 கோடியும், கர்நாடகாவில் ரூ.20 கோடியும், கேரளாவில் ரூ.7.55 கோடியும் வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படம் வெளியான 4 நாட்களில் ரூ.520.79 கோடியை வசூலானதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், வார நாட்களாக இருந்தபோதிலும் திங்கட்கிழமை உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ள படம் 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|