Advertisement

நடிகனாக 28 ஆண்டுகள்...மகிழ்ச்சியை பொங்க ஷாரூக் கான் ட்விட்

By: Monisha Mon, 29 June 2020 11:39:35 AM

நடிகனாக 28 ஆண்டுகள்...மகிழ்ச்சியை பொங்க ஷாரூக் கான் ட்விட்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகனாக 28 ஆண்டுகள் நிறைவானதையொட்டி தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியை பொங்க கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாரூக் கான். இவர் பாலிவுட் பாட்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுவார். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

1992-ம் ஆண்டு 'தீவானா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த ஜூன் 26-ம் தேதி இவர் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இதனால், ஷாரூக் கானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். #28YearsOfShahRukhKhan என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.

bollywood,actor,shah rukh khan,twitter,hashtag,fans ,பாலிவுட்,நடிகர்,ஷாரூக் கான்,ட்விட்டர்,ஹேஷ்டேக்,ரசிகர்கள்

இந்நிலையில் இதுகுறித்து ஷாரூக் கான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "எப்போது என்னுடைய கனவு ஒரு தேவையாகவும், பின்னர் என்னுடைய தொழிலாகவும் மாறியது என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுக்காலம் என்னை அனுமதித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய தொழிலை விட என்னுடைய கனவு இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்களை மகிழ்விக்கும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு மகிழ்ச்சியை பொங்க ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

Tags :
|