- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் ஷாருக் நடித்துள்ள ஜவான் படத்தின் வசூல் ரூ.900 கோடி நெருங்குகிறது
நடிகர் ஷாருக் நடித்துள்ள ஜவான் படத்தின் வசூல் ரூ.900 கோடி நெருங்குகிறது
By: Nagaraj Wed, 20 Sept 2023 12:43:17 PM
சென்னை: ‘ஜவான்’ படம் வெளியான 12 நாட்களில் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
‘ஜவான்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ‘ஜவான்’ படம் நல்ல வசூல் செய்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ‘ஜவான்’ படம் வெளியான 12 நாட்களில் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.