- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஷாலினி அஜித்குமார் 23-வது திருமண நாள் .. லேட்டஸ்ட் புகைப்படம்
ஷாலினி அஜித்குமார் 23-வது திருமண நாள் .. லேட்டஸ்ட் புகைப்படம்
By: vaithegi Tue, 25 Apr 2023 1:29:38 PM
நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றாலோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு சென்றாலோ அவருடைய புகைப்படங்களும், அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம்.
தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகளில் அஜித் குமாரும் ஷாலினியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான ஷாலினி பின், நடிகையாக கலக்க தொடங்கினார். காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம் திரைப்படத்தில்.
முதல் பட வெற்றியை தொடர்ந்து, 2-வது படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். ஆனால், தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வைத்திருந்து, ஓராண்டுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்து கொண்ட, இந்த தம்பதிகள் இருவரும் நேற்று தங்களது 23 -வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை ஷாலினி ஒரு காதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, 23 வது திருமண நாளை குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பலரும் வாழ்த்துக்களை ஒரு பக்கம் குவிக்க, மறுபக்கம் இந்த புகைப்படம் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.