Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் படம் ஒட்டிய ஸ்கூட்டியில் அமர்ந்து அஜித் ரசிகர்களை கோபமாக்கிய ஷாமிலி

விஜய் படம் ஒட்டிய ஸ்கூட்டியில் அமர்ந்து அஜித் ரசிகர்களை கோபமாக்கிய ஷாமிலி

By: Nagaraj Thu, 17 Dec 2020 9:19:39 PM

விஜய் படம் ஒட்டிய ஸ்கூட்டியில் அமர்ந்து அஜித் ரசிகர்களை கோபமாக்கிய ஷாமிலி

அஜித்தின் மச்சினி ஷாமிலியால் ரசிகர்கள் வெகுவாக கொதிப்படைந்துள்ளனர்.

தல அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரி ஷாமிலி. இவர் தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர், பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஷாமிலி நடித்திருக்கின்றார்.

தனது இரண்டு வயதில் சினிமா வாழ்வில் துவங்கிய ஷாமிலி 2009ஆம் வருடத்தில் ஓய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ajith fans,shamili,vijay photo,angry ,அஜித் ரசிகர்கள், ஷாமிலி, விஜய் புகைப்படம், கோபம்

இறுதியாக ஷாமிலி 2016ம் ஆண்டு வெளியான வீர சிவாஜி படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில், நடிகை ஷாமிலி விஜய் புகைப்படம் ஒட்டப்பட்ட ஸ்கூட்டியில் அமர்ந்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு தல அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறார். இதை கண்ட அஜித்தின் ரசிகர்கள் பலரும், நீங்கள் அஜித்துக்கு தான் மச்சினிச்சி என்பதை மறந்து விடாதீர்கள் என்று கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :