- வீடு›
- பொழுதுபோக்கு›
- சார்மினாரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடப்பதாக ஷங்கர் தகவல்
சார்மினாரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடப்பதாக ஷங்கர் தகவல்
By: Nagaraj Fri, 10 Feb 2023 04:59:21 AM
சென்னை: ஆர்.சி.15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெறுகிறது என்று தெரிய வந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழு நியூசிலாந்து சென்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்.சி.15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெறுகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.