- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரஜினிகாந்தை சந்தித்த பிரமாண்ட இயக்குனர் சங்கர்
ரஜினிகாந்தை சந்தித்த பிரமாண்ட இயக்குனர் சங்கர்
By: Nagaraj Thu, 16 June 2022 10:08:42 AM
சென்னை; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் சங்கர். அந்த படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்ஷன் கடந்த 13-ம் தேதி முதல் சமூக
வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல
புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், 15
ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினிகாந்தை
சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட
புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது
இணையத்தில் வைரலாகி வருகிறது.