Advertisement

சாந்தனு ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு

By: Monisha Wed, 08 July 2020 4:47:09 PM

சாந்தனு ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் கே பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு. சமீபத்தில் சாந்தனு தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் சாந்தனுவுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சாந்தனு ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

shantanu,new movie,murungaikai chips,bhagyaraj ,சாந்தனு,புதிய படம்,முருங்கைக்காய் சிப்ஸ்,பாக்யராஜ்

தரண் குமார் இசையில் ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவில், ஜொமெய்ன் படத்தொகுப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே பாக்யராஜ், சாந்தனு பாக்கியராஜ் இணைந்து நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக பாக்யராஜின் ஸ்பெஷலான முருங்கைக்காய் டைட்டிலில் இருப்பதால் இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :