Advertisement

சிவாஜி பட 15வது ஆண்டு... ரஜினியை சந்தித்த ஏவிஎம் நிர்வாகத்தினர்

By: Nagaraj Fri, 17 June 2022 11:41:36 PM

சிவாஜி பட 15வது ஆண்டு... ரஜினியை சந்தித்த ஏவிஎம் நிர்வாகத்தினர்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை ஏவிஎம் நிறுவனத்தினர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து உள்ளனர். ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம் சிவாஜி.

2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் படம் தான் தமிழ் சினிமாவை உலக அரங்கில் இன்னும் அதிகமாகப் பரவச் செய்தது. அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த அதிக வரவேற்பு இந்தப் படத்தில் இருந்துதான் ஆரம்பமானது.

shivaji,15 years old,rajinikanth,avm management,met,courtesy ,சிவாஜி, 15 ஆண்டு, ரஜினிகாந்த், ஏவிஎம் நிர்வாகம், சந்தித்தனர், மரியாதை

சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் தனது மகள் அதிதி உடன் சென்று பார்த்தார் ஷங்கர். அதுபற்றி, ''சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி செய்தது மறக்க முடியாத அனுபவம். அவரது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது'' என கூறியிருந்தார்.


இந்நிலையில் சிவாஜி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தாரின் ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகண், அருணா குகண் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். சிவாஜி 15 ஆண்டை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Tags :
|