- வீடு›
- பொழுதுபோக்கு›
- சென்னையில் அஜித் படத்தின் படப்பிடிப்பு... குவிந்த ரசிகர்கள்
சென்னையில் அஜித் படத்தின் படப்பிடிப்பு... குவிந்த ரசிகர்கள்
By: Nagaraj Sun, 16 Oct 2022 10:01:06 PM
சென்னை: சென்னையில் நடைபெறும் துணிவு திரைப்பட படப்பிடிப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் “துணிவு”. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். “துணிவு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் துணிவு திரைப்பட படப்பிடிப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி,
சென்னை, அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் அருகே துணிவு
திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் – மஞ்சு
வாரியர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்தை காண
ரசிகர்கள் பலர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.