Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் சித்தார்த்தின் டக்கர் படம்

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் சித்தார்த்தின் டக்கர் படம்

By: Nagaraj Wed, 31 May 2023 7:35:48 PM

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் சித்தார்த்தின் டக்கர் படம்

சென்னை: நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த டக்கர் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் ‘டக்கர்’. இப்படத்தில் திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.நிவாஸ் பிரசன்னா ‘டக்கர்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். ‘டக்கர்’ படம் வரும் ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

actor siddharth,no guts,give it a chance,mani ratnam ,நடிகர் சித்தார்த், தைரியம் இல்லை, வாய்ப்பு கொடுங்கள், மணிரத்னம்

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் "எந்த இடத்திலும் நிற்காத வேகமான ஒரு படம் தான் ’டக்கர்’ . இந்தப் படத்தில் ‘டக்கர்’ என்ற தலைப்பை பயன்படுத்தியதன் காரணம், மோதல்.

ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான மோதல்கள் தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப் பட்டது.

ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை." இவ்வாறு நடிகர் சித்தார்த் பேசினார்.

Tags :