Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிகப்பு ரோஜாக்கள் 2 -ல் சிம்பு கதாநாயகனாகிறார்; கோலிவுட்டில் உலா வரும் செய்தி

சிகப்பு ரோஜாக்கள் 2 -ல் சிம்பு கதாநாயகனாகிறார்; கோலிவுட்டில் உலா வரும் செய்தி

By: Nagaraj Fri, 11 Sept 2020 9:17:48 PM

சிகப்பு ரோஜாக்கள் 2 -ல் சிம்பு கதாநாயகனாகிறார்; கோலிவுட்டில் உலா வரும் செய்தி

சிகப்பு ரோஜாக்கள் 2 -ல் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றி பெற்ற தமிழ்ப் படங்களின் இரண்டாம் பாக அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

கமல்ஹாசன், ஶ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தில் பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன்.

இளம் பெண்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு உறவுகொண்டு பிறகு கொலை செய்துவிடுவார். இந்தப் படத்துக்கு வசனம் கே.பாக்யராஜ். 1978-ல் வெளிவந்த இந்தப் படத்தை மீண்டும் இயக்க நீண்ட நாள்களாகவே ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தார் பாரதிராஜா மகன் மனோஜ்.

red rose-2,simbu,manoj,shooting,director ram ,சிவப்பு ரோஜா-2, சிம்பு, மனோஜ், படப்பிடிப்பு, இயக்குனர் ராம்

இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் 'மாநாடு' படத்தைத் தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சிதான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே மன்மதன் படத்தில் இதே பாத்திரத்தை ஏற்று நடித்த சிம்பு,

இந்தப் படத்துக்கும் ஓகே சொல்லியிருக்கிறாராம். கொரோனா சூழல் சரியானதும் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே 'சிகப்பு ரோஜாக்கள்-2' படத்துக்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ராமுடன் சேர்ந்து எழுதியிருப்பதாக மனோஜ் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|