Advertisement

வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளாரா சிம்பு

By: Nagaraj Wed, 07 Dec 2022 12:06:40 PM

வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளாரா சிம்பு

சென்னை: வாரிசு படத்தில் பாடல் மட்டும் இல்ல சிறப்பு தோற்றத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை செய்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான ’வாரிசு’ படத்தின் ‘தீ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

tamil,telugu language,varis,song,simbu,special appearance ,தமிழ், தெலுங்கு மொழி, வாரிசு, பாடல், சிம்பு, சிறப்பு தோற்றம்

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் சிம்பு பாடியது மட்டுமின்றி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிக்கும் காட்சியில் விஜய்யும் இருப்பாரா அல்லது சிம்பு மட்டும் தனியாக வரும் காட்சி உள்ளதா என்பதை படம் பார்த்தால் தான் தெரிய வரும்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் வந்தது போலவே ’வாரிசு’ படத்தில் சிம்பு ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|
|
|