- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாலிவுட்டிற்கும் செல்ல உள்ள சிம்பு; விரைவில் வெளியாகுமா அறிவிப்பு?
பாலிவுட்டிற்கும் செல்ல உள்ள சிம்பு; விரைவில் வெளியாகுமா அறிவிப்பு?
By: Nagaraj Sat, 15 Oct 2022 11:18:43 AM
சென்னை : தனுஷ் மாதிரி சிம்புவும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறார். சிம்புவின் பாலிவுட் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது தமிழில்
அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், முன்னணி இயக்குனர்களிடம்
கதையும் கேட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரை உலகில் முன்னணி நடிகர்களுக்குள் போட்டி இருப்பது சகஜம். ரஜினி, கமல் விஜய், அஜித் போன்ற போட்டி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது எப்போதும் ஒரு சலசலப்பு இருக்கும். அந்த வரிசையில் தனுஷும், சிம்புவும் அவர்களுக்குப் பிறகு போட்டி நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
இருவருக்கும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் இவர்களின் படங்கள் வெளியாகும் போது சமூக வலைதளங்களில் அவர்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டைகளும் வரும். நாங்கள் நண்பர்கள் என்று சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் கூறினாலும், ரசிகர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் தீரவில்லை.
ஆனால் தற்போது தனுஷ், சிம்பு இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து
வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பாலிவுட்,
ஹாலிவுட் என வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். ஆனால் சிம்பு இன்னும் தமிழ்
படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
எனவே
விரைவில் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். பாடகராகவும்
களம் இறங்கப் போகிறார். ஹிந்திப் படத்தில் ஒரு பாடலைப் பாடப் போகும்
சிம்பு, பிறகு பாலிவுட்டில் நடிக்கப் போகிறார்.
அந்த
வகையில் தற்போது அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் தான்
நடிக்கும் படம் சாதாரண படமாக இல்லாமல் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும்
என்றும் முடிவு செய்துள்ளார். அதனால் தான் தற்போது கதை கேட்பதில் அதிக
கவனம் செலுத்தி வருகிறார்.
சிம்புவின் பாலிவுட் அறிவிப்பு விரைவில்
வெளியாகவுள்ளது. தற்போது தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும்
இவர், முன்னணி இயக்குனர்களிடம் கதையும் கேட்டு வருகிறார்.