Advertisement

ஒரே மாதத்தில் உருவாகும் பட்ஜெட் படத்தில் நடிக்கும் சிம்பு

By: Nagaraj Mon, 05 Oct 2020 1:05:52 PM

ஒரே மாதத்தில் உருவாகும் பட்ஜெட் படத்தில் நடிக்கும் சிம்பு

பட்ஜெட் படத்தை தயாரித்து நடிக்கிறார் நடிகர் சிம்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.

திண்டுக்கல்லில் அடுத்த வாரம் சிம்பு-சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக ஒரே ஷெட்யூலில் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கேரளாவில் உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ள சிம்பு இந்த படத்தில் புதிய தோற்றத்தில் காட்சியளிப்பார் என்றும், ரசிகர்கள் அதனை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

budget film,simbu,30 days,suchindran,movement ,பட்ஜெட் படம், சிம்பு, 30 நாட்கள், சுசீந்திரன், இயக்கம்

அடுத்தவாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அதன்பின் 60 நாட்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வரும் ஜனவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சிம்புவின் சம்பளம் இல்லாமல் இரண்டு கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|