Advertisement

சிம்புவின் பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

By: vaithegi Sun, 19 Mar 2023 10:59:58 AM

சிம்புவின் பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

படத்தின் ட்ரெய்லர் பத்து மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது .... நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜே, கெளதம் கார்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

trailer,batu thala,simbu ,ட்ரெய்லர் , பத்து தல,சிம்பு

ஏற்கனவே படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று படத்திற்கான இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்று பாடல்களும் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில் சிம்பு மிகவும் கெத்தான லுக்கில் அசத்தலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலரை பார்த்த பலருக்குமே படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.

மேலும், பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :