Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உலக அழகி பட்டம் வென்ற பின்னரும் எளிமை; இணையத்தை கலக்கும் ஐஸ்வராயாவின் பழைய படம்

உலக அழகி பட்டம் வென்ற பின்னரும் எளிமை; இணையத்தை கலக்கும் ஐஸ்வராயாவின் பழைய படம்

By: Nagaraj Sat, 23 May 2020 1:40:27 PM

உலக அழகி பட்டம் வென்ற பின்னரும் எளிமை; இணையத்தை கலக்கும் ஐஸ்வராயாவின் பழைய படம்

இதுதான் நிரந்தரம் என்று எளிமையாக உலக அழகி கிரீடம் தலையில் இருந்தாலும் தரையில் உட்கார்ந்து அம்மாவுடன் உணவு சாப்பிடும் ஐஸ்வர்யா ராயின் பழைய படம் செம வைரலாகி வருகிறது. .

கடந்த 1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று அனைவராலும் அறியப்படும் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், இராவணன், ஜீன்ஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

aishwarya rai,world brunette,mother,turf,eats,brunette crown ,ஐஸ்வர்யா ராய், உலக அழகி, அம்மா, தரை, சாப்பிடுகிறார், அழகி கிரீடம்

தற்போது ஐஸ்வர்யா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் பெற்ற உலக அழகி பட்டத்தை அடுத்து தனது வீட்டில் தலையில் உலக அழகி கீரிடத்துடன் தரையில் அமர்ந்து தனது தாயுடன் உணவருந்தியுள்ளார். என்ன தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக தரையில் அமர்ந்து உணவருந்தியுள்ளார் என ரசிகர்கள் புகழ் வருகின்றனர்.

இந்த எளிமைதான் இன்று வரை அவரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ வைக்கும் நபராக வைத்துள்ளது.

Tags :
|
|
|