Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? விரைவில் அறிவிப்பு!!!

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:01:02 PM

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? விரைவில் அறிவிப்பு!!!

சென்னை: சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே22 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடிக்க கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

update,sivakarthikeyan,ar,murugadoss,film,alliance,anirudh ,அப்டேட், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்,முருகதாஸ், படம், கூட்டணி, அனிருத்

எஸ் கே 21 படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 22 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆனால், இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் சென்சேஷன் நடிகை குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் சென்சேஷன் நடிகையாக மாறியுள்ள மிருனாள் தாகூர் தான் எஸ் கே 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|