Advertisement

சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாம்

By: Nagaraj Sun, 22 Jan 2023 11:24:10 AM

சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாம்

சென்னை: சிவகார்த்திகேயனும், முருகதாஸும் இணைந்து இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரு படம் பண்ணப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அது தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் ‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘7 ஆம் அறிவு’ போன்ற படங்களின் மூலம் மக்களின் கவனம் ஈர்த்தவர். முருகதாஸ். கடைசியாக ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கினார்.

அதன் பிறகு நடிகர் விஜய்யுடன் 65வது படத்தில் இணைவதை உறுதி செய்தார். ஆனால், அது கைவிடப்பட்டது. த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான இவரது ‘ராங்கி’ கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actor sivakarthikeyan,ar murugadoss,official announcement , ஏ ஆர் முருகதாஸ், கூட்டணி, நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கையில் தற்போது ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்கள் உள்ளன. சிவகார்த்திகேயனும், முருகதாஸும் இணைந்து இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரு படம் பண்ணப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அது தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மதுவின் லைட் ஹவுஸ் மூவி நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags :