Advertisement

சிவகார்த்திகேயனின் ட்வீட் செம வைரலாகிறது

By: Nagaraj Thu, 13 Apr 2023 8:00:09 PM

சிவகார்த்திகேயனின் ட்வீட் செம வைரலாகிறது

சென்னை: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், “நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நண்பர்களை உருவாக்குங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

தற்போது மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீர் பின்னணியில் ராணுவத்தை வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

producer,production,rajkamal,films ,சிவகார்த்திகேயன், ட்வீட், ராஜ்கமல் பிலிம்ஸ்

முதலில் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில், தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், “நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நண்பர்களை உருவாக்குங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

Tags :