Advertisement

புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

By: Nagaraj Sun, 04 Sept 2022 7:32:58 PM

புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

சென்னை: புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சினேகாவின் தற்போதைய போட்டோ ஷூட் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.

பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

photos,fans,prasanna,sneha,viral ,புகைப்படங்கள், ரசிகர்கள், பிரசன்னா, சினேகா, வைரல்

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் செம வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|
|