Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அப்போ அப்படி... இப்போ இப்படி: பிச்சைக்காரன் படத்திற்கு இப்படி ஒரு ஒற்றுமையா!!!

அப்போ அப்படி... இப்போ இப்படி: பிச்சைக்காரன் படத்திற்கு இப்படி ஒரு ஒற்றுமையா!!!

By: Nagaraj Sat, 20 May 2023 7:37:24 PM

அப்போ அப்படி... இப்போ இப்படி: பிச்சைக்காரன் படத்திற்கு இப்படி ஒரு ஒற்றுமையா!!!

சென்னை: என்ன ஒரு ஒற்றுமை... ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், மே 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று, நவம்பர் 8, 2016 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இந்த அறிவிப்பின்படி, நாட்டில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

beggar,demonetisation,picture,rs 2000 note,unity, ,ஒற்றுமை, படம், பணமதிப்பிழப்பு, பிச்சைக்காரன், ரூ.2000 நோட்டு

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதே ஆண்டில் மார்ச் மாதம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் இந்த பணமதிப்பிழப்பு குறித்து பேசப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் நேற்று வெளியானது. இதிலும் ஊழல் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படங்கள் வெளியாகிய இரண்டு வருடங்களிலும், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான சம்பவமாக பேசப்படுகிறது.

Tags :
|
|