Advertisement

நிறைய கனவு தருணங்கள்... மிக கடினமாக குட்பை: சிவாங்கி பதிவு

By: Nagaraj Sat, 22 July 2023 7:08:50 PM

நிறைய கனவு தருணங்கள்... மிக கடினமாக குட்பை: சிவாங்கி பதிவு

சென்னை: 4 வருடம்.. ஏகப்பட்ட நினைவுகள். நிறைய கனவு தருணங்கள். மிகவும் கடினமாக குட் பை என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 4 வது சீசனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசன் தற்போது தனது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

அடுத்த வாரம் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதற்கிடையில் நேற்று இரவுடன் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

dream moments,very difficult,shivangi,record,emotional,season ,கனவு தருணங்கள், மிகவும் கடினம், சிவாங்கி, பதிவு, எமோஷனல், சீசன்

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் இல் கோமாளியாகவே வலம் வந்த சிவாங்கி பல இன்னல்கள், பயிற்சிகளை தாண்டி சீசன் 4-இல் குக்காக களமிறங்கினார். அடுத்தடுத்து அல்டிமேட்டாக சமைத்து செஃப்ஃபின் பாராட்டுக்களை பெற்றுவந்தார். 2 முறைக்கு மேலாக இம்மியூனிட்டி பேண்டும் வாங்கி அசத்தினார்.

ஒரு முறை எலிமினேஷனுக்கு சென்ற சிவாங்கி விடாமுயற்சியால் வெற்றி பெற்று பைனல்ஸ் வரைக்கும் வந்துள்ளார். இந்த நிலையில், தனது கடைசி நாள் குறித்து சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதில், தற்போது குக் வித் கோமாளி 4வது சீசன் செட்டில் கடைசியாக எடுத்த புகைப்படத்தை போட்டு எமோஷ்னலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "4 வருடம்.. ஏகப்பட்ட நினைவுகள். நிறைய கனவு தருணங்கள். மிகவும் கடினமாக குட் பாய்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
|