Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இயக்குனர் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா; அதிர்ந்து நிற்கும் கோலிவுட்

இயக்குனர் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா; அதிர்ந்து நிற்கும் கோலிவுட்

By: Nagaraj Tue, 15 Dec 2020 8:25:14 PM

இயக்குனர் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா; அதிர்ந்து நிற்கும் கோலிவுட்

அதிர விட்ட இயக்குனர் நெல்சன் சம்பளம்... தளபதி 65 படத்திற்காக நெல்சன் திலிப்குமார் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தை அதிர விட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயற்றியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருந்த படத்தில் நடிக்க இருந்தார் விஜய்.

nelson,vijay film,salary,kollywood surprise ,நெல்சன், விஜய் படம், சம்பளம், கோலிவுட் வியப்பு

இந்த படத்திற்கான கதையை கேட்ட விஜய் அதில் மாற்றங்களைச் செய்யச் சொல்லி கூறியுள்ளார். ஆனால் முருகதாஸ் செய்த மாற்றங்கள் பெரிய அளவில் விஜய்யை ஈர்க்கவில்லை. இதனால் அவருக்கு நோ சொல்லி விட்டார்.

அதன் பின்னர் நெல்சன் திலீப்குமார் கூறிய கதையை கேட்டு அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கு இயக்குனர் நெல்சனுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 3-வது படத்துலயே இவ்வளவு பெரிய சம்பளமா என தமிழ் திரையுலகமே வியந்து வருகிறது.

Tags :
|
|