Advertisement

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள சோம்சேகர்

By: Nagaraj Wed, 07 Oct 2020 7:44:13 PM

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள சோம்சேகர்

பிக்பாஸ்4 வீட்டில் உள்ள சோம்சேகர் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

somesekar,big boss-4,aviation officer,starred ,சோம்சேகர், பிக்பாஸ்-4, விமானத்துறை அதிகாரி, நடித்துள்ளார்

படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் சோம் சேகர் இந்திய விமானத்துறை அதிகாரியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.

சோம் சேகர் கடந்த சீசனில் கலந்து கொண்ட முகேனைப் போலவே மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். இவர் ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :