Advertisement

திரைப் பிரபலங்களின் வாழ்த்து மழையில் சூரரைப்போற்று திரைப்படம்!

By: Monisha Thu, 12 Nov 2020 4:30:14 PM

திரைப் பிரபலங்களின் வாழ்த்து மழையில் சூரரைப்போற்று திரைப்படம்!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்கு திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா: சுதா கொங்காரா இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது வாழ்த்துகள்.. சூர்யா சுதாகொங்கரா மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

விஷ்ணு விஷால்
: சுதா அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். அற்புதமான படம். செம பெர்மான்ஸ் சூர்யா. ஜிவி பிரகாஷ் பிஜிஎம் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

sudha kongara,surya,soorarai potru,celebrities,greetings ,சுதா கொங்காரா,சூர்யா,சூரரைப்போற்று,பிரபலங்கள்,வாழ்த்து


இயக்குனர் ரவிகுமார்: சூரரைப்போற்று நேர்த்தியான படம். இசையும், வசனமும் மிரட்டல். தியேட்டரில் பார்த்திருந்தால் மிக சிறந்த அனுபவமாகியிருக்கும். சுதாகோங்கரா அவர்களின் எழுத்தும் இயக்கமும் அற்புதம். அவர்களின் நடிப்பு எவ்வளவுதான் பாராட்டினாலும் தகும். அமேசான் பிரைமுக்கு இந்த படம் ஒரு மணிமகுடம்

இயக்குனர் அறிவழகன்: ஏன் ஒரு ஏழைக்கு விமான பயணம் கிடைக்கக்கூடாது என்ற ஒரு இளைஞனின் கனவு நனவான கதை. சூர்யாவின் மிகச்சிறந்த நடிப்பும், சுதாவின் அபாரமான திரைக்கதையும் பாராட்டத்தக்கது.

sudha kongara,surya,soorarai potru,celebrities,greetings ,சுதா கொங்காரா,சூர்யா,சூரரைப்போற்று,பிரபலங்கள்,வாழ்த்து

இயக்குனர் ரத்னகுமார்: இதுவொரு எமோஷனல் வாழ்க்கை வரலாறு. மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டியுள்ளார். சுதா அவர்கள் திரைக்கதை உண்மையிலேயே அற்புதம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு: சூரரை போற்று ஒரு திரைப்படம் ஒரு உத்வேக வாழ்க்கை வரலாறு. நடிப்பு பசியில் உள்ள சூர்யாவுக்கு சரியான தீனி. மாறாவாகவே மாறியுள்ளார். சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

Tags :
|