Advertisement

ரிலீசுக்கு தயார் நிலையில் சூரரைப்போற்று!

By: Monisha Sat, 06 June 2020 2:33:54 PM

ரிலீசுக்கு தயார் நிலையில் சூரரைப்போற்று!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும், சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், படத்தின் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன

இந்த நிலையில் சமீபத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த திரைப்படம் தற்போது சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

surya,soorarai potru,coronavirus,post production,release ,சூர்யா,சூரரைப்போற்று,கொரோனா வைரஸ்,போஸ்ட் புரடொக்ஷன்,ரிலீஸ்

திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்படாது என்றும் அப்படியே திறக்கப்பட்டாலும், பெரிய பட்ஜெட் படங்கள் திரையிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது பல்வேறு யூகங்களுக்கு இடம் அளித்துள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Tags :
|