- வீடு›
- பொழுதுபோக்கு›
- சுயநலவாதிகளிடம் இருந்து விலகி இருங்கள்... நடிகை சதா அட்வைஸ்
சுயநலவாதிகளிடம் இருந்து விலகி இருங்கள்... நடிகை சதா அட்வைஸ்
By: Nagaraj Sat, 08 Oct 2022 7:31:44 PM
சென்னை : உங்களைச் சுற்றியுள்ள சுயநலவாதிகளிடமிருந்து விலகி இருங்கள் என்று நடிகை சதா தெரிவித்துள்ளார்.
தமிழில் ஜெயம், எதிரி, வர்ண ஜாலம், அந்நியன். பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சதா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் சதா வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாருக்கும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய ஒரே குறிக்கோள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான்.எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
நமது மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ள, உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்
பொருட்களையும் மனிதர்களையும் கண்டுபிடியுங்கள், மகிழ்ச்சியாக இருப்பது
நமக்குள்ளேயே இருக்கிறது, அதைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை, நம்மை
விரும்பாதவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள்.உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்
கூட வரலாம்.
ஆனால் அதற்கு பதிலாக என்று
நினைத்துக்கொண்டு, நமக்கு மகிழ்ச்சியைத் தரும் மற்ற விஷயங்களில் கவனம்
செலுத்த வேண்டும்.நம்மைக் கவனித்துக்கொள்வது சுயநலம் அல்ல.உங்களுக்கு மன
அமைதி வேண்டும் என்றால், உங்களைச் சுற்றியுள்ள சுயநலவாதிகளிடமிருந்து விலகி
இருங்கள் என்று சதா தகவல்கள் தெரிவித்தார்.