- வீடு›
- பொழுதுபோக்கு›
- வலிமை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்; அஜித் பங்கேற்கிறார்
வலிமை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்; அஜித் பங்கேற்கிறார்
By: Nagaraj Sat, 24 Oct 2020 7:19:43 PM
ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 'வலிமை' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் அஜித் அதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது 'வலிமை'. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்திருக்கும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு
படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்நிலையில்
கடந்த மாதம் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு தொடங்கியது. அதில் நடிகர்
கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
தொடர்ந்து
தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 'வலிமை' படப்பிடிப்பு
தொடங்கியிருப்பதாகவும் அஜித் அதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. மேலும் பொங்கலுக்கு 'வலிமை' திரைப்படத்தை திரைக்கு
கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.